எத்தனை வேதனை எங்கிருந்து வந்தாலும்
தப்பாமல் உதவுவது நட்புறவுமட்டுமே
மற்ற உறவுகள் நிற்காமல் போகையிலே
பக்கபலமாய் நாம் இருப்போம் எனச்
செப்பாமல் உடன் இருப்பது நட்புறவு மட்டுமே
பட்டம் பதவி மட்டற்ற செல்வம் அத்தனை
போயினும் எட்டத்தில் போகாது
பக்கத்தில் நிற்பது நட்புறவு மட்டுமே
பற் பல செல்வங்கள் செட்டாகப்பெற்றாலும்
முக்காலம் முழுச்செல்வம் நட்புறவு மட்டுமே.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நட்புறவைப்பற்றி இவ்வளவு தெழிவாக சிறப்பான வசனநடையில் கொடுத்திருப்பதயிட்டு மிக்க மகிழ்ச்சி
உங்கள் பணி தொடரட்டும்
உங்கள் கருத்திற்கு நன்றி
Post a Comment