Sunday, September 20, 2009

ஏன் இந்தமோகம்

சினிமா மோகம் ஆட்டிப்படைப்பதால்
சீர் அற்றுப் போகிறது பல இளைஞர் வாழ்க்கை
கனவுத்தொழிற்சாலையின்மயக்கத்தால்
கனவாகிப்போன வாழ்க்கைதான் எத்தனை
ஒரே ஒரு திரையில் தோன்றும் கனவுக்காய்
ஒளிமயமான எதிர்காலத்தை அழித்தவர் எத்தனை
இளமைத்துள்ளலுடன் ஓடிவரும் இளவல்கள்
இளமையைத்தொலைத்து யார் யாருக்கோ அடிமையாய்
தாடி நரைத்து ஒட்டியவயறுடன் ஒரு சான்ஸ்சுக்காய்
வாடிச்சருகாய் சாலையோரம் வந்தவர் எத்தனை
பகட்டு வாழ்வினால் பயித்தியமான இளைஞர்களே
திகட்டும் சினிமா ஆசை தரப்போவது எதுவுமில்லை
நினைத்து மனம் வருந்துவதைத்தவிற்க இன்றே
நிலையான கல்வி நிகரற்ற பட்டங்களைத் தேடி
நிலையான வாழ்வுக்காய் களம் அமையுங்கள்.

Monday, September 14, 2009

[ காதல் சுகமானது ]

காதல் என்பது ஒரு சுகமான அனுபவமே
காதல் வருவதும் வாழ்வில் ஒரு முறைதானே
காதல் பல வருமானால் அது காம உறவுக்கானதே
காதல் தோற்கினும் பழிவாங்கல் தோன்றுவதில்லையே

ஆணின் காதல் மனதைவிட்டு என்றும் அழிவதில்லை
பெண்ணின் காதல் மன ஆழத்தில் உறங்கிவிடும்
உண்மைக்காதல் எல்லாம் மணமேடை ஏறுவதில்லை
கண்டதும் காதல் பெரும்பாலும் ஒருதலைக் காம உணர்வே

காதலுக்காய் நினைவாலயம் அமைத்தான் சாஜகான்
காதலுக்காய் முடி துறந்தான் எட்வேட் மன்னன்
காதலுக்காய் கல்லறையில் சமாதி ஆனான் ரோமியோ
காதலுக்காய் உயிர் கொடுத்தான் அம்பிகாபதி

எங்கிருந்தாலும் அவள் வாழநினைப்பது காதலே
மங்கையின் நிலைக்காய் மனம் வருந்துவதும் காதலே
சங்கையீனம் வராமல் தடுப்பதும் உண்மைக்காதலே
தங்கையாய் மதித்து மலர் சொரிவதும் காதலே.

Tuesday, September 8, 2009

நட்புக்குத்துரோகம்

மனமறிந்து பாபம் எதுவும் செய்யவில்லை
கனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
நிலையான குடும்ப பாரம்பரியத்தின் வாரிசு
விலைமதிப்பில்லா பெற்றோரின் நடுப்பையன்

தனியானவழிசமைத்து முறையாக கட்டிஎழுப்பிய
பலமான வியாபார சாம்ராஜ்யம் எனது சாம்ராஜ்யம்
கனிவான மனநிலையால் இலகுவாக பங்காளியானான்
நிலையான வாழ்வற்ற ஏழைக்குடும்பத்தலைமகன்.

வருடங்கள் ஓடின பங்காளியை மணமகனாக்க இனிமையான
குடும்ப உறவை துரிதமாகச் சமைத்துக்கொடுத்தான்
சாம்ராஜ்யத்தின் தலைமைக்கர்த்தா நடுப்பையன். நன்றிகள்
பலமாய்ச்சொன்னான் தாம்பத்திய்த்தில் நுளைந்த தலைமகன்.

நாடு கொந்தளித்தது இனங்கள் அழியத்தொடங்கின- வேற்று
நாட்டு மகள் மங்கல மங்கையானதால் பாதுகாப்புக்கு கேடு வருமுன்
நாடு விட்டு தாய் நாட்டுக்கு மங்கையை அனுப்ப நாள் குறித்தான்
தூய நட்புக்கு உயிர் கொடுக்கும் குணக்குன்று நடுப்பையன்.

நண்பன் கையில் சாம்ராஜ்யத்தின் திறவு கோல் திறம்பட
வியாபாரம் நடைமுறைக்குத்தோழ்கொடுக்க காலம்
காலமாய் பயிற்சி அளித்து உருவாக்கிய காசாளன். இவனுக்கு
உதவிட இளவல் ராஜுஎனப்பெயர் கொண்ட என் உயிர் நண்பன்

இன்று செய் நன்றிகளெல்லாம் மறந்து பண்புகள் காற்றோடுபோய்
நண்பனென நம்பி அளித்த எனது சாம்ராஜ்யத்தை தனது தனி
உடமை யாக்கி நடந்து வந்த வழி மறந்து சொன்ன சொற்களை
அழித்து சுயநலம் பெரிதாகி யார் நீ இந்த வியாபார சாம்ராஜ்யத்திற்கு
என என்னைக் கேள்வி கேட்கிறானே முருகா நீதியை நீயே சொல்

Friday, September 4, 2009

[ பாவிப்பயல் ]

அன்று பாட்டன் பூட்டன் போட்டசாதி விலங்கால்
மனிதரை மனிதராய் மதிக்கமறந்தோம்
பாகுபாட்டைக் கையில் எடுத்தோம்
வலிகளைக்கொடுத்தோம் திருந்தமறுத்தோம்
இன்று மெலியார் அதிகாரத்தில் மாற்றான்கை
கோர்க்கையில் மறுதலிக்கிறோம்
மனம் வெதும்புகிறோம் உரிமைக்கு கைகொடு
எனக்கேடகிறோம்
பட்டவலி அடிமனதில் எழுகையில் அதிகாரஞ்
செய்திடத்துடிக்கிறது மனது அதனால்
நீதி சாகிறது நிர்மூலமாகிறது தமிழ் மண்
பாவிப்பயல் மாறுவானா பாவப்பட்டமக்கள்
மீளுவாரா கர்த்தரே கருணை காட்டும்

Tuesday, September 1, 2009

[ விடையை யார் தருவார் ]

அப்பப்பா என்னே பயங்கரக் கொடுமை
தப்பு என்ன செய்தான் ஈழத்தமிழன்
உரிமையைத் தவிர வேறு எதைக் கேட்டான்
உலகில் நீதி செத்து தர்மம் அழிந்தது ஏன்
தார்மீகப்பேச்சு வெத்துவேட்டுப்பேச்சுத்தானா
பாரில் முதன்மை பெற்றது வியாபார சிந்தைதானா
ஈழத்தமிழனின் உயிர் மதிப்பற்றுப்போனதேன்
விட்ட தவறுகளை நோர்வே திருத்திக்கொள்ளுமா
மீளாத்துயிலிலிருந்து அய்நா மீண்டெழுமா
அமெரிக்கா தலைமத்துவத்தை நிலைநிறுத்துமா
ஆறாத்துயரிலிருந்து தமிழன் மீட்சி பெருவானா
ஆயிரம் வினாக்கான விடையை யார் தருவார்?