Thursday, August 27, 2009

[அற்புதவாழ்வு ]

பட்டப்படிப்பு படித்து என்ன...
கோட் சூட் அணிந்து என்ன...
பென்ஸ்ல் உலாவந்து என்ன...
சாப்பிடநேரமின்றி
தூங்க நேரமின்றி
குழந்தையைக் கொஞ்ச நேரமின்றி
தாம்பத்தியத்தைத்தொலைத்துப் பணம்
பணமென்று ஆலாய்ப்பறக்கும்
மனிதா
ஈற்றில்
நீ அடையப்போவதுதான்என்ன?!!!!
ஆசையைத்துறந்தால்
அற்புத வாழ்வைப்படைக்கலாம்.

Monday, August 24, 2009

[சுதந்திரம் யார் பெற்றார்]

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைதானா
அன்று சூரியன் அஸ்தமிக்கா ஏகாதிபத்தியத்தின்
அடிமையாக இருந்தோம்
இன்று டெல்லிவாலாக்களின் ஏதேச்சாரத்திடம்
அடிமையாக இருக்கிறோம்.

தண்ணிரைத்தடுக்கும் அண்டை மாநிலக்காரனை
தட்டிக்கேட்க உரிமை இல்லாச் சுதந்திரம்
டெல்லியைத் தட்டிக்கேட்க தார்மீகவலுவற்ற
கொள்ளைகாரர் கையில் திறவு கோல்
கொடுத்த சுதந்திரம்

வேட்டிக்கும் சேலைக்கும் சோரம் போய்
வோட் போடும் சுதந்திரம்
சுதந்திரம் பெற்றோம் துகிலுரியப்பட்டோம்
அம்மணமாய் நிற்கிறோம் எமக்கெங்கே
இருக்கிறது சுதந்திரம்

தமிழர் சுதந்திரம் பெற்றார்களா?....
ஏமாந்த தமிழினமே ...
சிந்தித்துப்பார்.

Saturday, August 22, 2009

[காத்திரு காலச்சுவடு மாறும் நிலைவரை]

நேற்று நடந்த ஈழ உரிமைப்போரில்
மாண்டதமிழர் லட்சம் லட்சமாய்
நிராயுதபாணிகளாய் கேட்பார் அற்று.

ஒரு சின்ன இனக்குழுவை வேரோடழிக்க
ஒன்று பட்டது ஆசிய ஜொதி அமெரிக்கத்
தேவி சோசலிஸ்ற்வலையம் அகில உலகம்.

தனித் தனி நாடு தனித் தனி இனங்கள்
தலை எடுத்தாளச் சாமரம் வீசும் விந்தை
உலகம் தமிழன் முனையும் தனி நாட்டு
வாழ்விற்கு சென்னீர் ஊற்றும் முறைமை
புரியாப்புதிராம்.

ஆறு கோடித்தமிழர் வாழும் பூப்பந்துலகில்
தன்னைத் தானே ஆளத்தேவை ஒரு சிறு
நிலமே.

அய்நூறு ஆண்டுகால் அடிமை வாழ்வை
மீட்டிடத் திட்டம் போட்டான் கலிகாலக்
கரிகாலன்.

கொள்கைப்பற்று, நாட்டுப்பற்று,மொழிப்பற்று
தியாகப்பற்று எல்லாப்பற்றும் சங்கமித்து
களம் நிமிர்ந்தது ஈழமண் டலம்.

மூன்று சகாப்தம் முப்பரிமாணத்துடன்
கட்டம் கட்டமாய் காவியம் படைத்தான்
மானங்காத்த ஈழத்தமிழன்.

பாவியான பாரதத்துப் பேய் மகன் வேகமாய்த்
தொடுத்தான் சதிவலைப்பின்னலை.

ஈழத்தமிழனின் நிஜமாகி நிமிர்ந்த தனி
நாட்டரசை ஊழிக்கால நர்த்தனம் ஆடிச்
சிதைத்து அழித்தான் நீதி தேவனின்
தத்துப்பிள்ளை போல்.

மானத்தமிழன் மனக்குமுறலுடன் உறு மீன்
நிலை எடுத்தான் காலச்சுவடு மாறும்
நிலைக்காக.

[பாசம் எது வரை]

பெற்றவள் காட்டிடும் அற்புதப்பாசம்
தட்சணநாயகன் பற்றிடும்வரையாம்

அப்பன் போற்றிடும் புத்திரபாசம்
புத்திரன் மங்கையின் கைத்தலம்
பற்றிடும்வரையாம்.

அக்கையின் தங்கையின் அண்ணன்மேல்
பாசம் மட்டற்றசீர் தந்திடும்வரையாம்

அண்ணன்மார் தம்பிமார் கொட்டிடும்
பந்தமும் பாசமும் பண்டுப்பத்திரம்
செப்பிடும்வரையாம்

கட்டியமனையாள் காமக்கிளத்தியின்
காதலும் பாசமும் சட்டமுங்கட்டிலும்
ஆடிடும்வரையாம்

புத்திரன் புகழ்திடும் அப்பன் மேல்
பாசம் அப்பன் சொத்தினைப்பெற்றிடும்
வரையாம்

எத்தனை எதிர்வினை எற்பட்டபோதும்
ஈற்றினில்வருவது நட்பெனும் பாசப்பிணப்பாம்.

Monday, August 17, 2009

[ ஆண்டவா நீ இருக்கிறாயா?]

ஆண்டவா ஆண்டவா நீ இருக்கின்றாயா
நீ இருந்திருந்தால்மீண்டும் மீண்டும்
துன்பக்கேணியில் வீழ்த்தியிருப்பாயா
மாண்டவர்க்கெல்லம் நீகொடுத்தது
ஒரே விதியா-சின்னவாண்டுகள் செய்த
தவறுதான் என்ன ஆண்டவா அவர்கள்
கேட்பதெல்லாம்அன்பு பாசம்
அரவணைப்பு மட்டுமே
ஆண்ட உரிமையால் கேட்டதெல்லாம்
மீண்டும் தம்மை ஆழும் நிலை ஒன்றையே
பாண்டவர் போல் கேட்டது எம் இடம் மட்டுமே
வேண்டுபவர்கள் வேறு பட்டதால் ஆள்பவர்
பலம் பெற்றனரே
ஆண்டவா உன் மனம் இன்னும் இரங்கவில்லையே
ஆண்டு ஆண்டுகளாய் செய்த மாதவங்கள்
எல்லாம் தோற்கும் நிலை வந்துற்றதே
வேண்டுவதும் உன் அருள் ஒன்றையே-எம்மை
மீட்டிடும் இந்த துன்பக்கேணியிலிருந்து
மீட்டிடும் மருதமலையானே
மீண்டும் மீண்டும் தொழுகிறோம் மீட்டிடும்
எம்மை மீட்டிடும் மருதமலையானே

Thursday, August 13, 2009

[இன்னும் ஏன் தமிழன் மாறவில்லை]

ஆண்ட இனமாம் தமிழ் இனம்- இனி
மீண்டும் ஆளும் நிலை தோன்றுமா
வேண்டும் நிலைகுலையாத் தலைமை ஒன்று
தாண்ட எதுவித தடைகள் வரினும்
ஓங்குக புலம்பெயர் தமிழர் ஒற்றுமை
அங்காங்கே சில எட்டப்பர் தோன்றினும்
பாங்காக எமது உரிமைகள் உணர்ந்தால்
வீம்புக்காய் ஒலிக்கும் எதிர் குரல் மதிப்பற்று
மழைக்காலக் காளான் போல் மறையுமே
ஒன்றுபட்டால் உலகில் தமிழ் அரசு
குன்றில்இட்ட ஒளி விளக்காய் ஒளிருமே
ஒன்று படுவோம் ஒற்றுமை காப்போம்
ஒரு லட்சம் உயிர் பலிக்குரிய நீதிக்கு
உலக மன்றில் உரத்துக்குரல் ஒலிப்போம்
வேண்டுவது ஒற்றுமை ஒன்றே- தமிழா
வீம்பை ஒறுத்து மனந்திறந்து சிந்திப்பாயா?

Tuesday, August 11, 2009

புத்தன் என்ன சொன்னான்.

புத்தன் என்ன சொன்னான்
மகிந்தனே எண்ணிப்பார்
சாந்தம் கருணை காருண்யம்
என்றான் கவுதம புத்தன்
கொலை கொள்ளை கற்பழிப்பு
என்றான் கலிகாலப்புத்தன்
புலால் உண்ணாமை சிறந்த தத்தும்
என்றான் போதிமரப்புத்தன்
புலாலாகத்தமிழனைத்தின்பேன்
என்றான் புரட்டுப்புத்தன்
அரச முடியைத்துறந்து துறவறம்
போனான் ஆரியவம்ச சூரியக்குஞ்சு
அரசுரிமை தனி உடமை என் வம்சம்
அரசாளும் என்றான் பேரினவாதக்குஞ்சு
பரம்பரைக்கட்டமைபை வெட்டிச்
சாய்த்தான் சித்தார்த்தன்
பரம்பரைக்காய் களை எடுத்தான்
தன் கூட்டில் கரவலைப்புத்தன்
யார் புத்தன் யாரானாலும்
கோள் கொல்லும் காலம் வரும்.

Sunday, August 9, 2009

[காதல் யாசகம்]

பூவிலான பெண்மணி-என் மீது
காதல் கொள்ளடி மின்மினி
காதல் இல்லா வாழ்விலே
சாதல் நன்று இப்பாரிலே

காணும் காட்சி யாவுமே
களிகொள் மனதாய் மாறுமே
பேசும் வார்த்தைகள் யாவுமே
நேசம் கலந்ததாய் ஒலிக்குமே

கற்ற பாடங்கள் எண்ணிலா
முற்றுமழித்த கண்ணிலாள்
கனவு காணும் என்னிடம்
காதல் கொள்ளடி மின்மினி

மாலை சூடி மனை புகும்
வேளையில் காதல் கொள்ளடி
என்னவளே காதல் கொள்ளடி
கனிமொழியே காதல் கொள்ளடி.

Saturday, August 8, 2009

[நீ சொல்லுவாய் கிளியே]

மனம் என்னும் மேடையிலே
தினம் ஆடும் மா மயிலே-உன்
இதமான காதல் கண்டும்
சதம் போட முடியல்லே-என்
மனம் மெல்லாம் குருதி மழையிலே
இனம் சனம் மரணக்குழியிலே
புனர்ஜன்மம் பிறக்குமா
புதுக்குடில் ஏகுமா ஏகமாய்
பசிப்பிணி தீருமா தீற்கமாய்
துணி அணி சேருமா நேர்மையாய்
நிர் பய வாழ்வு நிலைக்குமா
இப்பரிதவிப்புத்தான் தீருமா- உன்
கைத்தலம் பற்றுவேனா யார்
சொல்லுவார் நீயே சொல் கிளியே.

Monday, August 3, 2009

[தமிழீழ வரலாறு]

சுயம் இழந்த தமிழர்கள்
சம உரிமைக்களம் அமைத்தார்.
பெரும் பான்மைத் திமிராலே
சிறுபான்மைக் கெதிரானான்.
தமதுரிமைப் போருக்காய்
படைசேர்த்தான் தமிழ்தலைவன்.
சுயலாபம் தலை தூக்க உள்
நுளைந்தான் அயல் நாட்டான்.
நரிக் கணக்கைச் சரிசெய்யப்
புறப்பட்டான் கரிகாலன்.
தனி அரசுக் கனவுகளால்
களம் சேர்ந்தான் பல இளவல்.
புறநாநூறுக் கதை எழுதிப்புகழ்
பூத்தான் தமிழ்த் தலைவன்.
அயல் நாட்டுப்பெருங்கனவு
பகல் கனவாய் ஆனதனால்.
தனிநாட்டுக்கட்டமைப்பைக்
கலைத்தழிக்கக், களம் புகுந்தான்
காந்தி தேசக்கொலைகாரன்.
பெரும்பான்மைத்தோழனுக்காய்
நிதி கொடுத்து மதி கொடுத்து
கடைசியில் அய்நா வில்
குரல் கொடுத்து
அழித்தொழித்தான் நிஜமாகும்
தமிழ் ஈழ தனி அரசை.

[ India is one of the country that
crushed the aspirations of the
Eelam Tamils]