Friday, July 31, 2009

பாடலா அது

பாட்டொன்று கேட்டேன்
பேச்சற்றுப் போனேன்
பேரிடி பெற்றேன்..பாடலா அது

என்னென்ன சொன்னான்
எப்புத்தப்பா சொன்னான்
பொருள் அற்றுச்சொன்னான்..
பாடலா அது

யார் யாரோ கட்டுறான்
சீர் அற்றுக் கட்டுறான்
பாட்டென்று கட்டுறான்..
பாடலா அது

கத்திறான் கத்திறான்
காதொடியக் கத்திறான்
கந்தசாமி கத்திறன்..பாடலா அது

கேட்கிறான் கேட்கிறான்
நாதி அற்றவன் கேட்கிறான்
பாடலென்று கேட்கிறான்..
பாடலா அது.

[ Recently south Indian Tamil
film's songs has no lyrical
precision in composing
songs]

Wednesday, July 29, 2009

[மழலை இன்பம்]

நின்முகம் தந்திடும் நிர்மலச் சிரிப்பு
தண் ஒளிவீசும் வெண்மதி தந்ததில்லை
உன் மழலைக்குரல் இனிமை
வேய்ங்குழல் இசை தந்ததில்லை
உன் தளர் நடைத்துள்ளல்
மென் பூங்கொடி அசைவிலில்லை
என் சிந்தை கவர் மதி
வேறு சிந்தையில் தோன்ற வில்லை

[In anything and every thing
the child's beauty is the best]

Sunday, July 26, 2009

[உறவுநிலை]

செல்வம் கல்வி சீரான வாழ்வு
கூடிடும்போது சேர்ந்திடும்
சுற்றம் விதி வலிமையால்
வாழ்வின் ஓர் காலை(செல்வம்)
ஓடிடும் போது ஓடியே போகும்
உற்றார் உறவு.

[ If you have money only
the relatives stays with you.]

Saturday, July 25, 2009

[சீர்கேட்கும் அவலம்]

இளம் மனதின் ஆசையெல்லாம்
சிலை வடிவம் பெற்றதில்லை
சிலை வடிவம் பெற்றதெல்லம்
கலைச்செல்வம் ஆனதில்லை

தலை மகனாய் அவதரித்தால்
தனியாசைக் கிடமில்லை
தாய் ஆசைப் படடோலை
சேய் ஆசையைச் சுட்டெரிக்கும்

பேராசைப் பெற்றவளால்
சீர்கெட்டது பல குடும்பம்
நூல் படித்துத் தலை நிமிர்ந்த
இக்கால இளவலுக்கு
சீர் கேட்டுச் சமர் பிறக்கும்
கற் காலப் பண்பாடு
எக்காலம் பலியாகும்
தப்பாமற் சொல்லுங்கள்
முக்காலம் உணர்ந்தவரே.

[பட்டோலை=நீணடகோரிக்கை.
கற்காலம்= பழையகாலம்
முக்காலம் உணர்ந்தவர்= கடவுள்]

{Asking Dowry destroy the
happiness of the couples}

Thursday, July 23, 2009

[பத்தர் கூட்டம்]

கோவில் மணி ஓசை கேட்டுக்
கோவில் போகும் ஒரு கூட்டம்
காலை வேளைப்பூசை காணும்
ஆவலில் கூடும் ஒரு கூட்டம்
மேள தாளத்துடன் தூங்கு
காவடியுடன் போகும் ஒரு கூட்டம்
ஆடல் பாடலுடன் ஓதுவார்கள்
பின் போகும் ஒரு கூட்டம்
எத்தனை கூட்டங்கள்
எங்கெங்கு கூடினும் அத்தனையும்
முருகன் பத்தர்கள் கூட்டம்.

Wednesday, July 22, 2009

[கோபம் ஒரு சத்துரு]

சினம் தரும் அழிவுகளை
அறிந்தவர்கள் ஒரு சிலரே
சினம் கொண்ட மனதிற்கு
மன அழுத்தம் குருதி அழுத்தம்
அத்தனையும் அதிகரித்து
மன நலனும் உடல் நலனும்
விரைவாகச் சீர்கெடுமே
மன்னிப்பதும் மறப்பதுவும்
நடந்துவிட்டால் ஏறியவை
இறங்குவதுவும் சீர்கெட்ட
உடல் நிலையும் மன நிலையும்
சீர் பெற்று உயர்வடையும்
எனத்தப்பாமல் சொன்னாரே
இக்காலப் பல அறிஞர்.

[ Anger is the destroyer of all
relationships. ]

[மனச்சுத்தம்]

சுத்தம் சுகம் தரும் மந்திரத்தை
அறிந்தவர்கள் எத்தனை பேர்
உடல் சுத்தம் அடைவதற்குப்
புனல் ஆடிப்பெற முடியும்
மனச் சுத்தம் அடைவதற்கு
வாய்ச் சுத்தம் வழி சமைக்கும்
மனச் சுத்தம் பெற்றவற்கு
பேராற்றல் வந்தடையும் என
முன்னோர்கள் சொல்லியதைக்
கடைப் பிடிப்பார் பயன் பெறுவார்

[மனமது சுத்தமனால் மந்திரங்கள்
ஓதவேண்டாம்]

[நட்புறவு மட்டுமே]

எத்தனை வேதனை எங்கிருந்து வந்தாலும்
தப்பாமல் உதவுவது நட்புறவுமட்டுமே
மற்ற உறவுகள் நிற்காமல் போகையிலே
பக்கபலமாய் நாம் இருப்போம் எனச்
செப்பாமல் உடன் இருப்பது நட்புறவு மட்டுமே
பட்டம் பதவி மட்டற்ற செல்வம் அத்தனை
போயினும் எட்டத்தில் போகாது
பக்கத்தில் நிற்பது நட்புறவு மட்டுமே
பற் பல செல்வங்கள் செட்டாகப்பெற்றாலும்
முக்காலம் முழுச்செல்வம் நட்புறவு மட்டுமே.

Monday, July 20, 2009

[அற்புதக்காதல்]

கண்டதும் காதல் வெறும்
கற்பனைக் கனவுநித்திரை
மீண்டால் நிச்சம் புரியும்
நித்திலமீதிலே.

அற்புதக்காதல் கைப்பிடி
வேள்வியில் நிச்சயமாகி
குப்பென் மலர்ந்து உறவுகள்
புரிந்து உயிரிலில் கலந்து
நிரந்தரமானது

பெற்றவர் உற்றவர்
மற்றவர் மகிழ்ந்து முப்
பொரி தூவிமுத்திரை
பதித்து அம்பலமானது

பற்பல மேகங்கள் அப்பப்ப
சூழிலும்நிச்சயமாக இணை
பிரியாதது அற்புதக்காதல்

Sunday, July 19, 2009

காக்க யார் வருவார்

நட்டநடுப்பகலில் நாலகலம்
வீதியிலேஇஷ்டப்பட்டுத்
துகிலுரியப்புறப்பட்டான்
இத்துஷ்டன்

தட்டிக்கேட்கநாதி இல்லா
இந்நாட்டில்தட்டிக்கேட்ட
குணமகனைக்கொன்று
விட்டார் எட்டப்பர்கூட்டங்கள்
ஒன்று சேர்ந்து.

கட்டைப்பஞ்சாயத்து காமக்
களியாட்டம்கொடிகட்டிப்
பறக்கும் இந்நாட்டில்
நீதி செத்து நெடுநாளாய்
போனதனால்.

குன்றில்குமரன் மனம்
வெறுத்துவேற்றுக்கிரகம்
குடிபுகுந்தான்அதனால்
இப்போ எம்மைக்காக்க
யார் வருவார் கச்சி
ஏகம்பரே.

இறைவன் இருக்கிறானா

நட்டநடுக் காட்டில் நாலு பக்கம் வேலிகட்டி
கொட்டக் கொட்ட விளித்துக் காவல் புரியும்
இஷ்டப்படி சுட்டுத்தள்ள உரிமை பெற்ற
இலங்கை இராணுவம்.கஷ்டப்படு நன்றாக
கஷ்டபடுஎனச்சபிக்கப்பட்ட ஈழ்மக்கள்
இரக்கப்பட யாரும் அற்ற நிலைகண்டு
பொங்கி எழுந்த புலம் பேயர்ந்த தமிழ் மக்கள்
காப்பாற்று காப்பாற்று எனக்கேட்டபோதும்
கண்டும் காணாது போல் நடித்த பன்னாட்டு
அரசு அதிகாரிகள் அயல் நாட்டுச்சந்தைக்காய்
ஆதர்வுக்கரம் நீட்டத்தயங்கும் ஒபமா நிர்வாகம்
ஏதும் அறியா முள் வேலிக்குள் பொங்கி அழும்
ஏழைக்கண்ணீரால் கட்டப்பட்டநீச்சல் தடாகம்
பசிக்கொடுமையால் பலியாகும் பச்சிளம் பாலகர்
மூச்சற்றுப் போகும் முகமறியா முதியோர்கள்
காவல் நாயால் கற்பழிக்கப்பட்ட இளம் கன்னிகள்
இத்தனை நடந்தும் எதிர் வினை விளைவிக்காத
இறைவன் என்றொருவன் இருக்கிறானா எனச்
சொல் என் அன்புத்தோழா

Saturday, July 18, 2009

ஈழவன் சாபம்

பட்டம் பதவி பல் கோடிச் சொத்துக்காய்
பரிதவிக்கும் ஈழ மண்ணைப் பலி
கொடுத்து பதவி பித்துப்பிடித்து
உளறும் கிழக் கருணாநிதியே
நீ ஊழ் பிடித்து கூர்கெட்டு துகில் அற்று
வாய் கோணி பரிதவிக்க க்கடவாய் என
நான் இடும் சாபம் பலிக்க வேண்டும் என்
தென்கோடி இறையனாரே.

தோழன் மடல்

காரணம் யாதோ தோழா மாதம்பலவுமாகி-உன்
காகிதம் காணவில்லைஊரிலும் ஒன்றுமில்லை

வீரியம் மிக்க ஈழ மக்கள் ஆரியக்கொலைஞரால்
பாரிய கொலைக்குள்ளானார் .

அவர் பூமியெல்லாம் யாருமற்ற பூமியாய்க் காட்சி
கொடுக்கையில் காவல் அற்ற வன்னிமக்கள் கானகத்து
விலங்காகிகூறு கெட்ட காந்திதேச மைந்தர் சதியால்
மரிக்கிறார் தினம் தினம் ஆயிரம் ஆயிரமாய்-

நீதி அற்ற அய்நா மன்றம் மூச்சற்றுநாவிழந்து ஊமை
யானதால்தீம்பு வரும் அச்சம் அற்றுஆட்டம் போடுகிறான்
வீம்பு பிடித்த கோதப்பய ராஜபச்சே

காலம் மாறும் புலி வீரர் பழிதீர்ப்பார் எனப்புகலும் எம்
மக்களின் மன ஆவல் என்றுதீரும் எனச்சொல்வாய் என்
ஆருயிர் அன்புத்தோழா.

மானத்தமிழன்

மானத்தமிழர் எல்லாம் கெஞ்சி
அழுதும் நீ மனமிரக்கம் இன்றி
மௌனித்தாயே. தானைத்
தலைவன் என்ற சொல்லுக்காய்
ஈழத்தலைவனை கொன்றொளித்
தாயா?

பாலுக்கும் பட்டு மெத்தைக்கு மாய்
பார் புகழ் மானத் தமிழனை கொன்ற
நீ வாரப்போகும் வாழ்வு எத்தனை
நாளுக்கென்று வாய் திறந்து செப்பு
நீதிக்கெல்லாம் சமாதி கட்டிய
கருணாநிதியே.

Tuesday, July 14, 2009

காமத்தின் பரிசு

காலமெல்லாம் காமசுகம்
திளைத்திடும் கருத்தியலால்
காளையரும் கன்னியரும்
காத்திடவெண்டிய முன்னறி
தெய்வங்களை கடத்துகிறார்
அனாதை இல்லம் நோக்கி
யாரும் அற்ற பாவிகளாக
யா அரும் அற்று கன்னியவள்
தனித்திருந்தால் வேண்டா
உறவு வரும் வேசித்தனம்
வேகமெடுக்கும் இப் பூமி
தன்னில் பாவிப்பயல் போற
இடம் பாதாள இரயில் தடமோ.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு தொழிற்சாலை- அதில்
கணவன் மனைவி தான்எஜமான்கள்- அவர்தம்
குழ்ந்தைச்செல்வங்கள்தான் வரும் லாபம்
லாபம் பெருகிட உருண்டோடும் வருடம்பல
வருடம் உருண்டோட வயது பல கூடிடுமே
வயது பல கூடக்கூட இழமை மிக செலவாகும்
இழமை செலவாக செல்வங்களின் விவாகம்
கை கூடும்
விவாகம் கைகூட் முதுமை கோலொச்சும்
முதுமை கோலொச்ச இயலாமை துதி பாடும்
இய்லாமை துதி பாடத் தாம்பத்தியம் பலியாகும்
தாம்பத்தியம் பலியாகச் சிவன் தேடல் பிறப்பெடுக்கும்
தேடல் பிறப்பெடுக்க துறவறம் முனை பெறும்
துறவறம் முனைபெறப்பாசம் அறுபடும்
பாசம் அறுபட ஆறுபடைவீடுவாசமாகும்
படை வீடு வாச மாகமுற்றுபெறும் இல்வாழ்க்கை.

Friday, July 3, 2009

கலியுக வீமன்

பொங்கும் எழிற் சோலை தனில் புத்தம்
புது மலரது கண்டேன் போதை ஊட்டும்
அதன் எழிலில் என் மனதைப் பறி
கொடுத்தேன் இனபத் தமிழகத்தின்
இணை யில்லாத் தேவா என் அன்புக்
காணிக்கையாம் அம்மலரது தந்தேன்.