Saturday, August 22, 2009

[காத்திரு காலச்சுவடு மாறும் நிலைவரை]

நேற்று நடந்த ஈழ உரிமைப்போரில்
மாண்டதமிழர் லட்சம் லட்சமாய்
நிராயுதபாணிகளாய் கேட்பார் அற்று.

ஒரு சின்ன இனக்குழுவை வேரோடழிக்க
ஒன்று பட்டது ஆசிய ஜொதி அமெரிக்கத்
தேவி சோசலிஸ்ற்வலையம் அகில உலகம்.

தனித் தனி நாடு தனித் தனி இனங்கள்
தலை எடுத்தாளச் சாமரம் வீசும் விந்தை
உலகம் தமிழன் முனையும் தனி நாட்டு
வாழ்விற்கு சென்னீர் ஊற்றும் முறைமை
புரியாப்புதிராம்.

ஆறு கோடித்தமிழர் வாழும் பூப்பந்துலகில்
தன்னைத் தானே ஆளத்தேவை ஒரு சிறு
நிலமே.

அய்நூறு ஆண்டுகால் அடிமை வாழ்வை
மீட்டிடத் திட்டம் போட்டான் கலிகாலக்
கரிகாலன்.

கொள்கைப்பற்று, நாட்டுப்பற்று,மொழிப்பற்று
தியாகப்பற்று எல்லாப்பற்றும் சங்கமித்து
களம் நிமிர்ந்தது ஈழமண் டலம்.

மூன்று சகாப்தம் முப்பரிமாணத்துடன்
கட்டம் கட்டமாய் காவியம் படைத்தான்
மானங்காத்த ஈழத்தமிழன்.

பாவியான பாரதத்துப் பேய் மகன் வேகமாய்த்
தொடுத்தான் சதிவலைப்பின்னலை.

ஈழத்தமிழனின் நிஜமாகி நிமிர்ந்த தனி
நாட்டரசை ஊழிக்கால நர்த்தனம் ஆடிச்
சிதைத்து அழித்தான் நீதி தேவனின்
தத்துப்பிள்ளை போல்.

மானத்தமிழன் மனக்குமுறலுடன் உறு மீன்
நிலை எடுத்தான் காலச்சுவடு மாறும்
நிலைக்காக.

No comments:

Post a Comment