Monday, September 14, 2009

[ காதல் சுகமானது ]

காதல் என்பது ஒரு சுகமான அனுபவமே
காதல் வருவதும் வாழ்வில் ஒரு முறைதானே
காதல் பல வருமானால் அது காம உறவுக்கானதே
காதல் தோற்கினும் பழிவாங்கல் தோன்றுவதில்லையே

ஆணின் காதல் மனதைவிட்டு என்றும் அழிவதில்லை
பெண்ணின் காதல் மன ஆழத்தில் உறங்கிவிடும்
உண்மைக்காதல் எல்லாம் மணமேடை ஏறுவதில்லை
கண்டதும் காதல் பெரும்பாலும் ஒருதலைக் காம உணர்வே

காதலுக்காய் நினைவாலயம் அமைத்தான் சாஜகான்
காதலுக்காய் முடி துறந்தான் எட்வேட் மன்னன்
காதலுக்காய் கல்லறையில் சமாதி ஆனான் ரோமியோ
காதலுக்காய் உயிர் கொடுத்தான் அம்பிகாபதி

எங்கிருந்தாலும் அவள் வாழநினைப்பது காதலே
மங்கையின் நிலைக்காய் மனம் வருந்துவதும் காதலே
சங்கையீனம் வராமல் தடுப்பதும் உண்மைக்காதலே
தங்கையாய் மதித்து மலர் சொரிவதும் காதலே.

1 comment:

ஜோதிஜி said...

தமிழ்மணத்தில் இணைத்துப் பார்த்தேன். இணைந்து விட்டது. இது வரையிலும் நீங்கள் இந்த இடுகையை இணைக்க வில்லையா?

நேற்று மருத்துவமணையில் நான் பார்த்த மனிதாபிமனம் அற்ற நிகழ்வுகளும், மனம் திசை திரும்ப ஆனந்த விகடன் கவிதைகளையும் படித்துக்கொண்டுருக்க ஏன் இது போன்ற ஒரு கவிதைத் தளம் உருவாக்கக்கூடாது என்று யோசித்துக்கொண்டு வந்த போது உங்கள் கவிதைகள் கண்ணில் பட்டது.

உங்களால் கவிதை மிகச் சிறப்பாக எழுத முடியும் என்பது புரிகின்றது. wordpress பதிவுகளில் தமிழ்திரைப்பட கவிஞர் யுகபாரதி எழுதிக்கொண்டுருப்பதை சற்று படியுங்கள்.

எழுதிய பிறகு இரண்டு நாட்களாவது ஆற போட்டு வைத்து விட்டு பிறகு இது போன்ற இடுகையில் ஏற்றுக்கொள்ளுங்கள். காரணம் எடிட்டிங் என்று சொல்வார்களோ அதை கனகச்சிதமாக பொருத்திப் பாருங்கள். இன்னும் வீச்சு அதிகமாக நிரந்த தரமாக இருக்கும்.

வாழ்த்துகள்.

Post a Comment