Tuesday, September 8, 2009

நட்புக்குத்துரோகம்

மனமறிந்து பாபம் எதுவும் செய்யவில்லை
கனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
நிலையான குடும்ப பாரம்பரியத்தின் வாரிசு
விலைமதிப்பில்லா பெற்றோரின் நடுப்பையன்

தனியானவழிசமைத்து முறையாக கட்டிஎழுப்பிய
பலமான வியாபார சாம்ராஜ்யம் எனது சாம்ராஜ்யம்
கனிவான மனநிலையால் இலகுவாக பங்காளியானான்
நிலையான வாழ்வற்ற ஏழைக்குடும்பத்தலைமகன்.

வருடங்கள் ஓடின பங்காளியை மணமகனாக்க இனிமையான
குடும்ப உறவை துரிதமாகச் சமைத்துக்கொடுத்தான்
சாம்ராஜ்யத்தின் தலைமைக்கர்த்தா நடுப்பையன். நன்றிகள்
பலமாய்ச்சொன்னான் தாம்பத்திய்த்தில் நுளைந்த தலைமகன்.

நாடு கொந்தளித்தது இனங்கள் அழியத்தொடங்கின- வேற்று
நாட்டு மகள் மங்கல மங்கையானதால் பாதுகாப்புக்கு கேடு வருமுன்
நாடு விட்டு தாய் நாட்டுக்கு மங்கையை அனுப்ப நாள் குறித்தான்
தூய நட்புக்கு உயிர் கொடுக்கும் குணக்குன்று நடுப்பையன்.

நண்பன் கையில் சாம்ராஜ்யத்தின் திறவு கோல் திறம்பட
வியாபாரம் நடைமுறைக்குத்தோழ்கொடுக்க காலம்
காலமாய் பயிற்சி அளித்து உருவாக்கிய காசாளன். இவனுக்கு
உதவிட இளவல் ராஜுஎனப்பெயர் கொண்ட என் உயிர் நண்பன்

இன்று செய் நன்றிகளெல்லாம் மறந்து பண்புகள் காற்றோடுபோய்
நண்பனென நம்பி அளித்த எனது சாம்ராஜ்யத்தை தனது தனி
உடமை யாக்கி நடந்து வந்த வழி மறந்து சொன்ன சொற்களை
அழித்து சுயநலம் பெரிதாகி யார் நீ இந்த வியாபார சாம்ராஜ்யத்திற்கு
என என்னைக் கேள்வி கேட்கிறானே முருகா நீதியை நீயே சொல்

2 comments:

நிலாமதி said...

நீதி ஒரு நாள் சொல்ல படும் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்....கடவுள் மேல் பாரத்தை போட்டு மீதி வாழ்வை வளமாகுங்கள். தெய்வ அருள் கிட்டுவதாக். நட்புடன் நிலாமதி

M.Thevesh said...

நிலாமதி. உங்கள் வருகைக்கும்
ஆதரவுக்கும் நன்றிகள்.

Post a Comment