Monday, October 5, 2009

யார் அறிவார்

மூத்தபிள்ளைதான் மொக்குப்பிள்ளை
என்பார் அறியாதார்.
தந்தைக்குத்தோழ்கொடுப்பவனும்
இவனே
தம்பி தங்கைக்காய் உழைத்துக்கொடுப்
பவனும் இவனே
21 வயதில் இன்பம் காணும் தந்தை 35
வயது வந்தும் தனிமரமாய் நிற்க வைப்
பவனும் இவனே
மற்றவர் விருப்பு வெறுப்புக்கு மதிப்புக்
கொடுத்து தன்னை ஒறுக்குவனும்
இவனே
தம்பிமார் உயர தங்கைமார் வாழ்க்கைப்
பட எல்லாமானவன் உயராது ஏழ்மையில்
உழல்பவனும் இவனே
சமுதாயத்தின் குற்றச்சாட்டுக்குப்பதில்
சொல்லநிற்ப்பந்திக்கப்பட்டவனும் இவனே
இந்த பாழ்பட்ட சமுதாயம் என்று மாறும்
காயம்பட்டமூத்தவன் என்று மீள்வான்
யார் அறிவார்?

5 comments:

சரவண வடிவேல்.வே said...

நீங்கள் மூத்தவரா???

நல்ல கவிதை..

M.Thevesh said...

சரவண வடிவேல் said...

நீங்கள் மூத்தவரா???

நல்ல கவிதை..
இல்லை நடுப்பையன்.உங்கள் வரவுக்கும்
கருத்துக்கும் நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அசத்தல்

M.Thevesh said...

சுரேஷ் உங்கள் வரவுக்கும்
கருத்துக்கும் நன்றி

M.Thevesh said...

தமிழினி உங்கள் வரவுக்கும்
ஆலோசனைக்கும் நன்றி.
இணைப்பைப்பெறமுயற்சிக்கிறேன்.

Post a Comment