Wednesday, June 24, 2015

அறம் காத்த மண்ணின் மைந்தர்கள்
புடம் போட்டு தூய்மை காத்தார்கள்
தடம் மாறாத இளைஞர் கூட்டம்
தமிழருக்கு பெருமை சேர்தார்கள்
தட்டிக்கேட்கும் தம்பிகள் எல்லாம்
தரணி விட்டுப்போனதாலே எம்
பண்பாட்டுக்கோலங்கள் பல
பாழ்பட்டுப்போயினவே இந்
நாட்டு மக்கள் எல்லாரும் மேல்
நாட்டு மக்களாயினரே- காம
சுகம் தேடும் கூட்டம்- போதை
சுகம் தேடும் மைனர்கள்
கோலோச்சும் காலமாயிற்ரே
அப்பா அறியாச் செல்வங்கள்
அம்மா வளர்கும் செல்வங்கள்
அணைக்க ஆளில்லா செல்வங்கள்
அனாதை எனப்பெருகினரே
கற்கை நெறியைக் கடலில் கரைத்தனரே
சீர்கெட்ட தமிழர் சமுதாயம்
ஏற்றம் பெறுமா எம் வாழ்நாளில்
தோற்றம் பெறும் கேள்விக்கெல்லாம்
விடை தாராய் நல்லூர் உறை கந்தவேழே


No comments:

Post a Comment