Wednesday, June 24, 2015

அறம் காத்த மண்ணின் மைந்தர்கள்
புடம் போட்டு தூய்மை காத்தார்கள்
தடம் மாறாத இளைஞர் கூட்டம்
தமிழருக்கு பெருமை சேர்தார்கள்
தட்டிக்கேட்கும் தம்பிகள் எல்லாம்
தரணி விட்டுப்போனதாலே எம்
பண்பாட்டுக்கோலங்கள் பல
பாழ்பட்டுப்போயினவே இந்
நாட்டு மக்கள் எல்லாரும் மேல்
நாட்டு மக்களாயினரே- காம
சுகம் தேடும் கூட்டம்- போதை
சுகம் தேடும் மைனர்கள்
கோலோச்சும் காலமாயிற்ரே
அப்பா அறியாச் செல்வங்கள்
அம்மா வளர்கும் செல்வங்கள்
அணைக்க ஆளில்லா செல்வங்கள்
அனாதை எனப்பெருகினரே
கற்கை நெறியைக் கடலில் கரைத்தனரே
சீர்கெட்ட தமிழர் சமுதாயம்
ஏற்றம் பெறுமா எம் வாழ்நாளில்
தோற்றம் பெறும் கேள்விக்கெல்லாம்
விடை தாராய் நல்லூர் உறை கந்தவேழே


Tuesday, July 20, 2010

மனிதா உனக்குத்தேவைதானா

தாம்பத்தியம் தறிகெட்டுப்போனால்
தனிமை இனிமையான தீர்வாகிறது
தவிக்கிற மனது தனிமைக்கஞ்சி
தனிமையைத்தவிற்கவே-மனிதன்
தன் மானம் இழந்தாலும் தாரத்தின்
வழிபோகிறான்
மதிப்புக்கெட்டுப்போன வாழ்வு
அவனை
நடைப்பிணமாக்கிறது இறுதியில்
சுடுகாட்டுக்குவிரட்டுகிறது
மனிதா இவ்வாழ்க்கை உனக்குத்
தேவைதானா?

Friday, July 16, 2010

ஓர் தந்தையின் ஆசைக்கனவு.

வாழ்கையில் நீ பல வளங்கள் பெற்றாக வேண்டும்
ஈடில்லாப் பட்டங்கள் உனை வந்தடையவேண்டும
காதல் வாழ்வில் கற்கண்டுச் சுவை கூட்டவேண்டும்
இல்லத்துச்சிம்மாசனம் உன் உரித்தாக வேண்டும்
உன்மெத்தென்ற மடியில்இரு செல்வங்கள் படுத்
துறங்கவேண்டும்
நீ தொட்டதெல்லாம் பொன்னாக ஒளிபெறவேண்டும் -
நான் கிட்ட இருந்து பார்த்து மனமகிழவேண்டும்

Thursday, December 31, 2009

புத்தாண்டே வருக நிம்மதியைத்தருக

கழிகின்ற2009ம் ஆண்டு
காலனின் ஊழிக்கூத்தை
கனகச்சிதமாய் ஆடவைத்து
கலைந்து போகிறது.
வரும்2010ம் ஆண்டு
வலிகளைக்கழைந்து
புதியநம்பிக்கைகளை
ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளியேற்றும் ஆண்டாக
மலரவேண்டும் என்ற
ஆவல் எல்லோரதும்
எதிர்பார்ப்பாய் ஆகிறது
யாவருக்கும் என்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, November 20, 2009

நவம்பர் 27ல்

இளமையைஅழித்துச்சாவினைஅணைத்த
மாவீரரை நினைவுகூருவோம்
ஈழத்தமிழரின் விடிவுக்காய் தம் கல்வியை
கைவிட்டமாவீரரைநினைவுகூருவோம்
எதிரியிடமிருந்து மண்ணையும்
மககளையும்காக்கவெந்துஆகுதியான
மாவீரரைநினைவுகூருவோம்
காமத்தைஅழித்து சாவின் குப்பியை
சுமந்த அம்மாவீரரைநினைவுகூருவோம்
வலிமைமிக்க தமிழர் படையை அழித்த
வல்லாதிக்கநாட்டால் மண்ணோடு
மண்ணான பல் ஆயிரம் சாவுக்கஞ்சா
மாவீரரை நினைவுகூருவோம்
நவம்பர் இருபத்தேளில் சாவினைத்
தழுவிய சந்தணமேனியரை
நினைவுகூருவோம்.

Monday, November 16, 2009

எங்கே கழுவுவாய் இந்தியாவே?

அடிப்படை உரிமைகாய்
களங்கண்ட ஈழத்தமிழரைக்
காரணமின்றி அனியாயமாக
அழித்தொழிக்க ஆரவாரம்
இல்லாமல் தோள் கொடுத்த
அயல்நாட்டுக்காரனே- உன்
கையில் நனைந்த ஈழ்த்
தமிழர் இரத்தத்தை
காயுமுன் களுவ எங்கு
செல்லுவாய் என்று
கூறுவாய் தும்பை விட்டு
வாலைப்பிடித்துள்ள
இத்தாலிய நாட்டுச்சிங்காரியின்
காலைக்கழுவும் அகில இந்திய
இல்லை இல்லை இஸ்லாமிய
காங்கிரஸ் கழுதைக்கூட்டங்களே.

Thursday, October 8, 2009

புதியவை கற்றல்

கற்பது நிற்பதில்லை என்னாளும்
கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று தப்பாமல் சொன்னாரே
கற்க்கால அவ்வைக்கிழவி.
இக்கால இளைஞரிடம் கற்பதற்கு
பல வுண்டு.முன்பு கற்றதெல்லாம்
முதியவரின் கடந்த கால அனுபவமே.
புதியவை கற்பதினால் மனஞாலம்
விரிவாகும் புத்துணர்ச்சி தலை
தூக்கும். கற்காத கணணி அறிவு
கற்பதினால் வலைத்தேடல் சுலப
மாகும் விஞ்ஞானம் தொழில்
நுட்பம் புலனாகும்.
இளம் உள்ளம் அனுசரிக்கும்
நட்புணர்வால் பல வருடம்
பின்னோக்கிப்போவீரே.
மனநலனும் உடல் நலனும்
முன்னேறும் வீண் வம்பளக்கும்
வயோதிபர்மடம் காலியாகும்.
இளவலுடன் புரிதலுடன்
நட்பு றவு ஏற்பட்டால்
மேற்ச்சொன்ன எல்லாமும்
நிஜமகும் என்பதை உணர்வீரே.