Thursday, October 8, 2009

புதியவை கற்றல்

கற்பது நிற்பதில்லை என்னாளும்
கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று தப்பாமல் சொன்னாரே
கற்க்கால அவ்வைக்கிழவி.
இக்கால இளைஞரிடம் கற்பதற்கு
பல வுண்டு.முன்பு கற்றதெல்லாம்
முதியவரின் கடந்த கால அனுபவமே.
புதியவை கற்பதினால் மனஞாலம்
விரிவாகும் புத்துணர்ச்சி தலை
தூக்கும். கற்காத கணணி அறிவு
கற்பதினால் வலைத்தேடல் சுலப
மாகும் விஞ்ஞானம் தொழில்
நுட்பம் புலனாகும்.
இளம் உள்ளம் அனுசரிக்கும்
நட்புணர்வால் பல வருடம்
பின்னோக்கிப்போவீரே.
மனநலனும் உடல் நலனும்
முன்னேறும் வீண் வம்பளக்கும்
வயோதிபர்மடம் காலியாகும்.
இளவலுடன் புரிதலுடன்
நட்பு றவு ஏற்பட்டால்
மேற்ச்சொன்ன எல்லாமும்
நிஜமகும் என்பதை உணர்வீரே.

Monday, October 5, 2009

யார் அறிவார்

மூத்தபிள்ளைதான் மொக்குப்பிள்ளை
என்பார் அறியாதார்.
தந்தைக்குத்தோழ்கொடுப்பவனும்
இவனே
தம்பி தங்கைக்காய் உழைத்துக்கொடுப்
பவனும் இவனே
21 வயதில் இன்பம் காணும் தந்தை 35
வயது வந்தும் தனிமரமாய் நிற்க வைப்
பவனும் இவனே
மற்றவர் விருப்பு வெறுப்புக்கு மதிப்புக்
கொடுத்து தன்னை ஒறுக்குவனும்
இவனே
தம்பிமார் உயர தங்கைமார் வாழ்க்கைப்
பட எல்லாமானவன் உயராது ஏழ்மையில்
உழல்பவனும் இவனே
சமுதாயத்தின் குற்றச்சாட்டுக்குப்பதில்
சொல்லநிற்ப்பந்திக்கப்பட்டவனும் இவனே
இந்த பாழ்பட்ட சமுதாயம் என்று மாறும்
காயம்பட்டமூத்தவன் என்று மீள்வான்
யார் அறிவார்?