Monday, August 17, 2009

[ ஆண்டவா நீ இருக்கிறாயா?]

ஆண்டவா ஆண்டவா நீ இருக்கின்றாயா
நீ இருந்திருந்தால்மீண்டும் மீண்டும்
துன்பக்கேணியில் வீழ்த்தியிருப்பாயா
மாண்டவர்க்கெல்லம் நீகொடுத்தது
ஒரே விதியா-சின்னவாண்டுகள் செய்த
தவறுதான் என்ன ஆண்டவா அவர்கள்
கேட்பதெல்லாம்அன்பு பாசம்
அரவணைப்பு மட்டுமே
ஆண்ட உரிமையால் கேட்டதெல்லாம்
மீண்டும் தம்மை ஆழும் நிலை ஒன்றையே
பாண்டவர் போல் கேட்டது எம் இடம் மட்டுமே
வேண்டுபவர்கள் வேறு பட்டதால் ஆள்பவர்
பலம் பெற்றனரே
ஆண்டவா உன் மனம் இன்னும் இரங்கவில்லையே
ஆண்டு ஆண்டுகளாய் செய்த மாதவங்கள்
எல்லாம் தோற்கும் நிலை வந்துற்றதே
வேண்டுவதும் உன் அருள் ஒன்றையே-எம்மை
மீட்டிடும் இந்த துன்பக்கேணியிலிருந்து
மீட்டிடும் மருதமலையானே
மீண்டும் மீண்டும் தொழுகிறோம் மீட்டிடும்
எம்மை மீட்டிடும் மருதமலையானே

2 comments:

Thamizhan said...

ஆண்டவன் இல்லை, அதற்குச் செய்யும் அனைத்தும் வீண்,வீண்,வீண் !
இன்னுமா புரியவில்லை.
கோவில்களில் கொண்டு கொட்டும் அனைவரும்
மனிதனை நினைத்து ஆவண செய்யுங்கள்.
துன்பமும்,துயரமும் தாங்க முடியாவிட்டால்
மனாமைதி- மெடிட்டேசன் -மூச்சுப் பயிர்சி செய்யுங்கள்.ஏமாறாமல் நீங்களே கற்று செய்யலாம்.
போதும் கோவிலுக்குக் கொட்டியது !

M.Thevesh said...

Mr.தமிழன் உங்கள் ஆதங்கம் எனக்குப்புரிகி
றது என்ன செய்யலாம் எனக்கு வேறு வழி
தெரியவில்லை.

Post a Comment